Tuesday, November 30, 2010

என்ன செய்ய வேண்டும் என்று நம்மையே நாம் கேட்டாக வேண்டும்


முதலில், இரண்டாம் உலகப் போரின் பிறகு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு மேலே செல்லலாம். Judgement at Nuremberg - இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற படம் (1961) இயக்கியவர் ஸ்டான்லி கிராமர்.

இரண்டாம் உலகப் போரின் போது லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர், யுத்த முடிவில் இறந்து போகிறான். வழக்கம் போல எதேச்சாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகே நடந்த அநீதிகள் பற்றி கணக்கெடுப்பு நடக்கிறது. ஆனால், அந்தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது? யாரைக் குற்றவாளி என்று விசாரணை செய்வது என்ற கேள்வி எழுகிறது. யூதர்களைப் படுகொலை முகாம்களுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளைக் கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. அதன்படி ஹிட்லரின் அரசாட்சியில் முக்கிய நீதிபதிகளாக இருந்த நான்கு பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது. ஜெர்மனியில் உள்ள நியூரம்பேர்க் நகரில் நடைபெற்ற விசாரணையும் அங்கு நடந்த வாதப் பிரதிவாதங்களுமே இத்திரைப்படம்.

நீதிபதிகள் விசாரிக்கப்படுகிறார்கள். தேசத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஹிட்லர். அவரது உத்தரவை செயல்படுத்தியது மட்டுமே தங்கள் வேலை என்கிறவர்களிடம், லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதைத் தாங்கள் அறிந்திருக்கவில்லையா என்று கேட்கப்படுகிறது.

உண்மையில் தாங்கள் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. பெரும்பான்மை ஜெர்மானியர்களுக்கும் அவ்வாறான உட்படுகொலைகள் பற்றி குரூரமான வதைமுகாம்கள் இருந்தது பற்றி தெரியாது என்கிறார்கள். ஆனால் தேசபக்தித் திரையைத் தாண்டி அதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் இருந்தது குற்றம்தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஹிட்லர் தன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை நாஸி கட்சியில் கட்டாயமாக இணைத்துக்கொண்ட காரணத்தால் மட்டுமே தாங்கள் அந்த கட்சி உறுப்பினர்கள் ஆனோம் என்பதை சொல்கிறார்கள்.

தங்களின் உத்தரவு என்ன பாதிப்பை உருவாக்குகிறது என்பதை அறியாமல் எப்படி உத்தரவிட்டீர்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் அது ஹிட்லரின் கட்டளை@ அதை மீறினால் தாங்கள் உயிரோடு இருக்க முடியாது என்பதை எல்லோருமே புரிந்துகொண்டிருந்ததாகச் சொல்லி நிறுத்திக் கொள்கிறார்கள்.

விசாரணையின் இறுதியில், ஹிட்லர் மட்டும் குற்றவாளியில்லை; தேசத்தின் பெயரால் இனத்தின் பெயரால் நடைபெற்ற மூர்க்கங்களுக்கு குற்றங்களுக்குப் பங்கு பலருக்கும் இருந்தது பற்றி சொல்லப்படுகிறது. ஹிட்லரைப் புகழ்ந்து கொண்டாடி அவரைப் போன்ற ஒருவர் இங்கிலாந்திற்குக் கிடைத்திருந்தால் இங்கிலாந்து வளர்ச்சி பெற்ற நாடாகியிருக்கும் என்று பேசிய சர்ச்சில், ஹிட்லருக்குத் துணைநின்ற நாடுகள், ஆதரவு தந்த தொழில் அதிபர்கள், தேச விடுதலைக்கான களையெடுத்தல்கள் என்று நியாயப்படுத்திய அல்லது கண்டிக்காமல் விட்ட புத்திஜீவிகள் - பத்திரிகைகள், அவரது கட்சிச் செயற்பாட்டை விருப்பத்துடன் மேற்கொண்ட மக்கள் யாவருமே குற்றவாளிகள்தான் என்று குறிப்பிடப்படுகிறது.

அவர்கள் மனசாட்சியோடு நடக்கத் தவறியிருக்கிறார்கள். உயிர்ப் பயத்தில் அவர்கள் செயற்பட்டார்கள் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களைக் குற்றவாளி இல்லை என்று விடுவிக்க முடியாது. குற்றம் அவர்கள் அறிந்தே நடந்திருக்கிறது. ஆகவே குற்றம் உறுதி செய்யப்பட்ட ஜெர்மனிய நீதிபதிகள், படத்தின் இறுதியில் தண்டனைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்று விருப்பப்படுகிறவர்கள் - அவர்கள் எந்தத் தரப்பினராயிருந்தாலும் - செய்ய வேண்டியது என்ன? நடைபெற்று முடிந்த தவறுகளிலெல்லாம் தாங்கள் நேரடியாகப் பங்குபெற்றிருக்காவிட்டாலும், அவற்றுக்காகப் பரஸ்பரம் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டியது முதலில் முக்கியம். மற்றவர் தவறுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக முதலில் அவரவர் தத்தம் தரப்பிலுள்ள தவறுகளை எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்ள முன்வருதல் வேண்டும். அதுவே நல்லிணக்கத்திற்குத் திரும்பும் ஒரே வழி. இதில் பெரிய குற்றவாளிகள் சிறிய குற்றவாளிகள், முதலில் யார் வரவேண்டும், யாருக்குக் கூடுதல் பொறுப்பு என்று யோசிப்பது கூட, வழியை முடக்குவதுதான்.

அதேபோல, நாம் நேரிடையாகச் செய்யாத குற்றங்களுக்கு நாம் பொறுப்பில்லை என்று இருந்துவிட முடியாது. குற்றம் நடந்த போது கண்டிக்காமல் இருந்தது, அல்லது அவற்றை அறிந்து கொள்ளாமல் இருந்தது, அவையெல்லாம் நம் விடுதலைக்கும் சுதந்திரத்திற்குமாகச் செய்யப்படும் அவசியங்கள் என்று விபரிக்கப்படுவதை மறுத்துப் பேசாமலிருந்தது கூட எல்லாமே குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமைதான் என்று புரிந்துகொள்ளப்பட வேண்டும். கொலைகள், அழிவுகள் எல்லாவற்றையும் அற-அழிப்பு, நியாயமிழப்பு, மனித அவலம், சமூகச் சிதைவு என்ற நிலையில் எல்லாவற்றுக்கும் நம் தரப்பிலும் காரணங்களை ஏற்றுக்கொண்டு, அங்கீகரித்துக்கொண்டு வருத்தத்தைப் பகிர வேண்டியிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் முன்கையெடுப்பதில் இழிவொன்றுமில்லை. மற்றவர்களையும் அதுபோல் நடக்கத் தூண்டும், வெட்கவுணர்வை வெளிக்கொணரும் முன்னுதாரணமாக அது அமையும்.

படைபல வன்முறை ஆற்றல்களினால் எமக்கான தீர்வைப் பெற்றுவிட முடியும் என்று முனைந்ததில், நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் எவை என்பதைக் கறாராக ஒவ்வொருவரும் நமக்குள்ளாகவேனும் கேட்டுக் கொள்ள வேண்டும். அவசரமான தேவை இது. கடந்த முப்பது வருடங்களாக நாம் நடந்துகொண்ட அதேவிதத்தில், நம் விருப்பம் இருக்குமிடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட ஏதோ ஒரு வழியை யார் அழுத்தி உரத்துச் சொல்கிறார்களோ அவர்களை அப்படியே நம்பிப் பின்செல்ல வேண்டியதுதான் என்ற ‘கோவிந்தா’ மனநிலையிலிருந்து நாம் மீண்டாக வேண்டும். உலக யதார்த்தம், கள யதார்த்தம், நம் வலி, மாற்றான் வலி எதைப்பற்றியும் அலசி யோசிக்க சோம்பல்பட்டு அல்லது அச்சப்பட்டு, வெறுமனே குழுத்திரள் ஆவேசப் பொங்குதலின் கிறுகிறுப்பில் மிதந்து போய்க் கொண்டிருந்தால், நிதர்சனம் எப்படி வந்து முகத்தில் அறையும் என்பதை இப்போது யாரும் நமக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை.

நடப்புநிலையை உணரச் சோம்பல்பட்டு, அண்ணாந்து பார்த்தபடி சாக்கடையில் இறங்கிச் செல்லும் கனவு மிதப்புக்குத் தீனிபோடும் வெற்றாவேசப் பேச்சுக்களிலேயே இனியும் நம்மைத் தொலைப்பதா? உள்ளபடி நிலைமைகளை நாம் ஒவ்வொருவரும் மனம்திறந்து அலச வேண்டும்@ கனவை விலக்கித் தெளிவுகொள்ள வேண்டும்@ யதார்த்தமற்ற ஆவேசங்களின் ஏமாற்றை விளங்க வேண்டும். கால்தேய நடந்து கொண்டிருக்கும் நிலைமையையும் பாதையையும் கவனிக்காமல் நினைப்பைப் பல்லக்கில் வைத்திருப்பது போல ‘வீரநினைவு’களிலேயே மூழ்கிக் கிடந்தால், நிலம் உள்ளிட்ட உரிமைகள் பலவற்றையும் மேலும் மேலும் இழந்துகொண்டிருப்பதை நாம் தடுக்கப் போவதில்லை. நம் வெற்றுமுழக்கங்கள், இன்னுமின்னும் இழப்பதற்கான வாய்ப்புகளையே ஏற்படுத்தித் தந்துகொண்டிருப்பதை நாம் உணரவில்லையா? யதார்த்தத்தைக் காண மறுக்கும் உசார்மடத்தனச் சமூகமாக நாம் தொடர்ந்தும் தேய்ந்து கொண்டிருப்பதை நிறுத்தப் போகிறோமா இல்லையா?


நாம் வாயிலும் வயிற்றிலுமடித்து முழங்கிக் கொண்டிருக்கிற நம் பிரச்சினைகளை வேறு யாரும் வந்து தீர்க்க முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று நம்மையேதான் நாம் கேட்டாக வேண்டும்.

அதற்கு, நம் பழைய நினைப்புகளிலிருந்து நாம் கூடிய விரைவுடன் மீண்டாக வேண்டும். நம்மிடம் எந்தத் திட்டமுமின்றி, எதிரி மீதான குற்றச்சாட்டுகளைப் புலம்புவதால் எங்கேனுமிருந்து மீட்பர்களைக் கொண்டுவந்து விடலாம் என்ற மாயை…. அதை இன்றும் மக்களுக்கு விநியோகித்துக் கொண்டிருப்பது கடைந்தெடுத்த ஏமாற்றும் அயோக்கியத்தனமும் ஆகும். முட்டாள்த்தனமான எதிர்ப்புப் பழியுணர்ச்சிப் பேச்சுக்களால் நம்மை மேலும் மேலும் தளைப்படுத்திக் கொண்டிருப்பதை முதலில் நிறுத்தியாக வேண்டும்.

புத்திசாலித்தனத்தை நிரூபிக்க வேண்டிய அவசரகாலப் பரீட்சை நம் சமூகத்திற்கு முன் உள்ளது. நமது பிரதேசம் முறைப்படி ராணுவ முற்றுகைக்குள் வருவதையும் நிலங்கள் பறிபோவதையும் பாமரத்தனமாகப் புலம்பி வெளியுலகச் சக்திகளை எதிர்பார்ப்பதில் எந்த விவேகமுமில்லை. வீரச் சவடால்களும் எதிர்மறையான ஆபத்துகளையே அதிகரித்துக் கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ளக் கூரறிவு வேண்டியதில்லை. நமக்குப் பாதகமான நகர்வுகளின் தீவிரத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக நமது பேச்சையும் செயல்களையும் மாற்றிக் கொண்டாக வேண்டும். சட்டபூர்வமாக குறைந்தபட்ச அதிகாரத்தையேனும் உடனடியாகப் பெற்றுக்கொள்ள வழிகளை உருவாக்கிக்கொண்டு மேல்நகர வேண்டும். இதற்குத் தேவை வீரமும் ரோசமுமல்ல; விவேகம்!

உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறான் உளறுவாயன்

தோழர் பாலதண்டாயுதம்

திரைப்பட நடிகர் ராஜேஷ்

மிழகத்தில் வாழ்ந்த பல கம்யூனிஸ்ட் தியாகிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் கே.பாலதண்டாயுதம். அவரது ஊர் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள மாக்கினாப்பட்டி. அங்கு 1918-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 2-ம் தேதி பிறந்தார்.​ அவரது தந்தையின் பெயர் காளேஸ்வர முதலியார். ஊரில் பெரிய மனிதராக விளங்கினார்.​ பாலதண்டாயுதத்தை பாலன் என்று அன்புடன் அழைத்தார்கள். பெயர்தான் பாலன், அவரோ பெரிய அரசியல் மேதை.

நண்பர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் பணத்தையோ, உடையையோ,​​ வேறு எந்தப் பொருளையோகூட அவர் என்றுமே வாங்கிக் கொண்டதில்லை. ஒரு காலத்தில் படித்த இளைஞர்கள் மத்தியிலும், கம்யூனிஸ்டு அணிகள் மத்தியிலும், ஒரு ஹீரோவாகக் கொண்டாடப்பட்டவர் என்று இவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் ஜெயகாந்தன்.

சில காலம் பார்வார்ட் பிளாக் கட்சியில் முத்துராமலிங்கத் தேவருடன் சேர்ந்து செயலாற்றினார். இடைக்காலத்தில் திருச்சியில் தற்காலிகமாக முனிசிபல் சிப்பந்தியாகவும் வேலை செய்தார். பொன்மலையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த "தொழிலரசு' என்ற பத்திரிகையில் துணை ஆசிரியராக கல்யாணசுந்தரத்துடன் சேர்ந்து பணிபுரிந்தார்.​ ரயில்வே தொழிலாளர் இயக்கத்திலும் தொடர்பு கொண்டிருந்தார்.

இரண்டாம் உலகப் போரை எதிர்த்துப் பேசிய பேச்சுக்காக 1940-ம் ஆண்டு தோழர் பாலனுக்கு 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1938 முதல் 1948 வரையான காலகட்டத்தில் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம்,​​ சுமார் 9 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். தாயை இழந்தார், மனைவியைப் பிரிந்தார், வன்முறையாளர்களின் தாக்குதலுக்கு ஆளானார்.

மேடையில் பேச ஆரம்பிக்கும் முன்பு, ""வீட்டை விட்டுப் புறப்படுகிறபோதே என் மனைவியிடம், வந்தால் வரவில் வை. வராவிட்டால் செலவில் வை என்று சொல்லி விட்டுத்தான் வந்திருக்கிறேன்'' என்று சொல்லுவார்.

நடுப்பகல் பசி நேரத்தில் பாலன் ஒரு மணி நேரம் பேசினால்கூட கைதட்டல் தவிர வேறு எந்த அசைவும் கூட்டத்தில் இருக்காது.

1945-ம் ஆண்டு பாலனை நெல்லையில் காவல்துறை கைது செய்ய நெருங்கும்பொழுது,​​ அவர் பேசிய வீர வசனம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அந்த வசனத்தின் பாதிப்பு 1950-களில் வெளிவந்த பல திரைப்படங்களில் இருந்தது. பல கதாநாயகர்கள் பாலன் பாணியில் பேசி புகழ் பெற்றார்கள்.

1948-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. பாலன் தலைமறைவானார்.​ அந்த சமயம் ஒருநாள் போலீஸ்காரர்கள் பாலனைத் தேடி அவர் மறைந்திருந்த வீட்டிற்குள் சென்றுவிட்டார்கள். அடைக்கலம் கொடுத்த அந்த வீட்டுக்காரம்மா உடனே விறகுக் கட்டைகளை எடுத்து பாலன் மேல் அடுக்கி வைத்து அவரை தப்பிக்க வைத்தார்.

தலைமறைவாக இருந்த காலத்தில் கோதுமைத் தவிடு மலிவாக இருந்தது. அந்தக் கோதுமைத் தவிட்டைப் பனை வெல்லத்துடன் சேர்ந்து தண்ணீர் விட்டுப் பிசைந்து சாப்பிட்டு வந்தார். இப்படி பாலன் பல நாட்கள் சாப்பிட்டதால் இவருக்கு வயிற்று வலியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டன. இப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பல பேர் மனநோய்க்கு ஆளானார்கள்.

தலைமறைவாக இருக்கும்போது,​​ இரவில் சந்தேகப்படும்படியான சத்தம் கேட்கும்போதெல்லாம் புகைக்கூண்டு வழியாக பாலன் தப்பித்துவிடுவார். தலைமறைவாக இருந்தபோது பாலனின் இரு கால்களிலும் எக்ஸிமா சிரங்கு இருந்தது. அதில் இருந்து ஒரே நீராக வடியும். அதை சாதாரணமாக தாங்கிக் கொள்வார்.​ தினசரி ஒரு புதுக் துணி வாங்கிக் கொண்டு வந்து, கால்கட்டு போடுவார்களாம் மக்கள்.

இரவில் நாய் குரைக்கும் சத்தத்தை வைத்து, பாலன் ""இந்த சத்தம் மற்ற நாய்களைப் பார்த்துக் குறைக்கிறது; ஆள் வரும் சத்தத்தை கேட்டு அல்ல'' என்று கூறக் கூடிய அளவுக்கு அவரை தலைமறைவு வாழ்க்கை தயார்படுத்தியிருந்தது.

சிறைக்குச் செல்லுமுன், அவருடைய மனைவியைத் திருச்சியில் முத்துராமலிங்கத் தேவரின் நண்பரான ரத்தினவேல் தேவர் பாதுகாப்பில் விட்டுவிட்டுச் சிறை சென்றார்.

ஒருமுறை சிறைச்சாலையில் நிகழவிருந்த ஒரு கலகத்திலிருந்து சிறை அதிகாரிகளையும், கைதிகளையும் காப்பாற்றினார். இதற்காக சிறை அதிகாரிகள் பாலனைப் பாராட்டினார்கள்.

1971-ல் நாடாளுமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் திறம்படச் செயல்பட்டார். அங்கிருந்த பல கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவரது திறமையைப் பாராட்டியுள்ளனர்.

பேரறிஞர் அண்ணாவையும், தி.மு..வையும் தர்க்கரீதியாகவும் அதே சமயம் எளிமையாகவும் பாலனை போல வேறுயாரும் தாக்கிப் பேசி இருக்க முடியாது.

தி.மு..வை ஆட்சியிலிருந்து இறக்கியே தீருவேன் என்று மனதிற்குள் சபதம் செய்து கொண்டு, ...தி.மு.. ஆரம்பித்த புதிதில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அரசியல் களத்தில் பணி புரிந்தார் பாலன். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததோ 1977-ம் ஆண்டு. ஆனால் 31.5.1973- அன்றே விமான விபத்தில் பாலதண்டாயுதம் பலியானார்.

மிக உயர்ந்த லட்சியத்துக்காகப் பாடுபட்ட பாலன் பூமியில் மரணமடையாமல் வானவீதியிலேயே பஞ்ச பூதங்களோடு கலந்துவிட்டார். உயிரோடு இருந்தபோது நாடு அவருக்கு ஒரு மரியாதையையும் செய்யவில்லை, இறுதி மரியாதை செய்யும் சிரமத்தையும்கூட அவர் நமக்குக் கொடுக்கவில்லை.

(நன்றி: தினமணி கதிர்)

Monday, November 29, 2010

சாணக்கியரின் நேர்மை!

வரலாற்றில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவக் கதை...
இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர்.

ஒருநாள் அரசவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாணக்கியர் தலைமை அமைச்சர் என்ற முறையில் எழுந்து, ``மன்னா! நம் மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்'' என்றார்.

"தலைமை அமைச்சர் அவர்களே! தங்கள் கருத்தை வரவேற்கிறேன். எல்லா ஏழை எளிய மக்களுக்கும் கம்பளிப் போர்வை வழங்க ஏற்பாடு செய்கிறேன். அந்தப் பொறுப்பைத் தங்களிடமே ஒப்படைக்கிறேன்'' என்றார் அரசர்.

அதன்படியே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சந்திரகுப்தர்.

சாணக்கியர் ஆடம்பரம் இல்லாத சாதாரண வீட்டில் வசித்து வந்தார். கம்பளிப் போர்வை பற்றிய விஷயம் அந்த ஊர் கொள்ளையர்களுக்குத் தெரியவந்தது. கம்பளிப் போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று திட்டமிட்டார்கள்.

குளிர்காலம். நள்ளிரவு. சாணக்கியர் வீட்டிற்கு மூன்று கொள்ளையர்கள் சென்றனர். கம்பளிப் போர்வைகள் விதவிதமாக மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.

சற்றுத் தள்ளி ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு சாணக்கியர் படுத்திருந்தார். பக்கத்தில் அவரது வயதான தாயாரும் ஒரு பழைய கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்த திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

திருட வந்ததையும் மறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். கண் விழித்த சாணக்கியர் திகைத்தார். எதிரே மூன்று திருடர்கள். அவர்களில் ஒருவன், "ஐயா! நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்பளிகளைத் திருட வந்தோம். இவ்வளவு புதிய கம்பளிகள் குவிந்திருக்கும்போது நீங்களும், உங்கள் தாயாரும் கிழிந்து போன பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கின்றீர்களே... இவற்றில் இரண்டை எடுத்துக் கொள்ளக்கூடாதா?'' என்றான்.

அதற்கு சாணக்கியர், "அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஏழை எளிய குடிமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரசாங்கப் பொருள்கள். அவற்றை எப்படி என் உபயோகத்துக்கு பயன்படுத்த முடியும்? அப்படிப் பயன்படுத்தினால் மன்னர் என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்னாவது?'' என்றார் சாணக்கியர்.

திருடர்கள் சாணக்கியரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். "எங்களை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்குச் சொந்தமான பொருள்களைத் திருடவே எண்ண மாட்டோம்'' என்று சத்தியம் செய்தார்கள்.

என்ன இளைஞனே! சாணக்கியரின் செயலைக் கவனித்தாயா? இந்தக் கதையைக் குறிப்பிட்டதன் காரணம், பொது வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத்தான்.

Saturday, November 27, 2010

நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!

இந்தச் சொல் நான்கு எழுத்துகளால் ஆனது. வாழ்க்கையைச் செம்மையாக வாழ்வதற்குப் பொருள் வேண்டும். வாழ்வதிலும் ஒரு பொருள் வேண்டும். ஆம்! வாழ்க்கை அர்த்தம் நிறைந்ததாக, பொருள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

பொருளை ஆங்கிலத்தில் CASH என்கின்றோம். இதுவும் நான்கு எழுத்துக்கள் கொண்டதுதான். உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்கின்றபோது சில நேரங்களில் உரிமை யோடு என்ன எவ்வளவு CASH வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்கின்றோம். தமிழில், எவ்வளவு காசு வைத்திருக்கின்றீர்கள் என்கிறோம்.

இந்த CASH -ஐப் பெறுவதற்கு KASH இருந்தால் போதும். இது என்ன? புதிதாக இருக்கின்றதே என்கிறீர்களா? ஆம். இந்த KASH என்ற நான்கு எழுத்துகளிலும் நல்ல வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கின்றது.

K & Knowledge - அறிவு
A & Attitude - மனப்பான்மை
S & Skill - திறமை
H & Habit - பழக்கம்

இவை வெறும் சொற்களல்ல, வெற்றிக்கான மந்திரங்கள். அறிவு, மனப்பான்மை, திறமை, பழக்கம் என்ற இந்த நான்கு சொற்களின் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். அந்த பொருள் தானாகவே உங்கள் கைகளுக்கும், பைகளுக்கும் வந்து சேரும். வாழ்க்கையும் வளமானதாகும்.

இனிய இளைஞனே!

வாழ்க்கை, நான்கு எழுத்துகள் கொண்டது என்றேன். எழுத்துகள் மட்டுமல்ல, வாழ்க்கையும் நான்குவிதமானது. அவை:

1. தனிப்பட்ட வாழ்க்கை, 2. குடும்ப வாழ்க்கை, 3. தொழில் வாழ்க்கை,

4. சமூக வாழ்க்கை அல்லது தொண்டு வாழ்க்கை.

இந்த நான்கு விதமான வாழ்க்கையை யார் முழுமையாக வாழ்கின்றார்களோ, அவர்கள்தான் முழுமை பெற்றவர்கள். முழுமையாக வாழ்ந்தவர்கள்.

பொதுவாக இந்த முதல் மூன்று வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்கும். அது பொதுவானதும் கூட. ஆனால் நல்ல வாழ்க்கை நான்காவது வாழ்க்கைதான். அதுதான் தொண்டு செய்து வாழ்கின்ற தூய வாழ்க்கை. இந்த தொண்டு வாழ்க்கை தான், முன்னர் குறிப்பிட்ட மூன்று வாழ்க்கைகளுக்கும் அங்கீகாரத்தைக் கொடுப்பது. உங்களது முகத்தை, முகவரியை ஊருக்கும், உலகுக்கும் காட்டுவது.

'ஒரு தேசத்தின் நாகரிகத்தை அளக்கும் அளவுகோல், அதன் ஜனத்தொகையோ, நகரங்களின் விசாலமோ, செல்வத்தின் மிகுதியோ அல்ல. அங்கு பிறக்கும் மனிதர்களின் குணங்கள்தான்' என்பார் சிந்தனையாளர் எமர்சன்.

உங்களது குணத்தை வெளிப்படுத்துவது சேவைதான். பிறருக்காகச் செய்கின்ற சேவையில்தான் மகத்தான சக்தி வெளிப்படும். மனிதநேயத்தின் திறவுகோல், சேவையில்தான் இருக்கின்றது. உலகில் வாழும் உயிர்களுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் சிறந்த அறம் வேறு இல்லை.

Friday, November 26, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

'இதை தயவுசெஞ்சு சினிமாவா பாருங்க...' என்று இயக்குனர் டேவிட் பிஞ்ச்சரும் திரைக்கதை எழுதிய ஆரோன் சார்க்கினும் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். ஆனால், 'இது அப்பட்டமான பொய்... மிகைப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள்...', 'உண்மைச் சம்பவங்களுடன் ஏகப்பட்ட கற்பனைகள் கலக்கப்பட்டுள்ளன...' என்று எதிர் தரப்பு காட்டு கத்தல் கத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த விவாத சர்ச்சைக்கு காரணமான 'தி சோஷியல் நெட் ஒர்க்' ஹாலிவுட் திரைப்படம் மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் போக்கில் வெளியாகி வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இருபத்தாறு வயதுக்குள் ஓர் இளைஞன் கொடீஸ்வரனானது பெரிய விஷயம்தான். இணையத்தில் அவனால் உருவாக்கப்பட்ட ஒரு தளம் நாள்தோறும் வளர்ந்து வருவதும் உண்மைதான். ஒவ்வொரு நொடியிலும் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுவதும் நிஜம்தான். ஆனால், இந்த நிஜம் ப்ளஸ் உண்மைக்கு பின்னால் இருக்கும் விஷயங்களைத்தான் குற்றம்சாட்டுபவர்கள் பெரிதாக பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள்.

இணையத்தில் புழங்கும் அனைவருக்கும் 'முக நூல்' என்னும் 'ஃபேஸ்புக்' குறித்து தெரியும். பல் தேய்க்க பிரஷ்ஷை பயன்படுத்துவது போல் அந்தத் தளம், இணைய உலகில் வலம் வருபவர்களின் வாழ்க்கையுடன் ஒன்று கலந்துவிட்டது.

உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்தவொரு நபருடனும் இந்தத்தளம் மூலமாக நட்பாகலாம். பிசினஸ் பேசலாம். வேலை தேடலாம். வேலையில் அமரலாம். நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். காதலிக்கலாம். பிடித்த சினிமாவை பரிமாறிக் கொள்ளலாம். விருப்பமான பாடலை இணைந்து கேட்கலாம். விவாதிக்கலாம். கொஞ்சலாம். சண்டை போடலாம். பிஎச்டி தீசிஸ் எழுதலாம். விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம்... லாம்... லாம்...

Tuesday, November 23, 2010

ஆறுவது சினம்; சீறுவது அல்ல

பாதிப்புகளுக்குள்ளான சமூகம் என்ற வகையில், எங்களிடமிருந்து வெளிப்படும் பிரதான குணங்களிலொன்றாக கோபம் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், அந்தக் கோபத்தின் பின்னாலுள்ள நியாயங்களை வெளியுலகம் விளங்கிக் கொள்ளும்படியாக, கொச்சையற்ற விதத்தில் நாம் அதை வெளிப்படுத்தியிருக்கிறோமா என்று யோசித்தால், வெட்கப்படும்படியாக இருக்கிறது.

நம்முடைய நியாயம் என்பது, உள்நாட்டில் மற்றும் சர்வதேச அரங்கில், நியாயத்தின் பக்கம் நிற்க விரும்பும் நேர்மையான மற்றைய இன மக்களின் ஆதரவை பெறுவதாகவும் இருக்க வேண்டும். நம்முடைய கோபத்தில் உள்ள நியாயம், மற்றவர்களினது மனசாட்சியை சென்று உலுக்குவதாக இருக்க வேண்டும். மாறாக, அவர்களது ஆதரவுணர்வையே உலுக்கிவிடும் வன்முறை, வீராவேச கோமாளித்தனங்களாய் ஆகிவிடக் கூடாது.

“யார் வேண்டுமானாலும் கோபம் கொள்ளலாம். அது மிக எளிதானது. ஆனால், சரியான நபரிடம், சரியான நேரத்தில், சரியான காரணங்களுக்காக, சரியான விதத்தில் கோபம் கொள்வது என்பது எளிதானது அல்ல; அது எல்லோராலும் முடியக் கூடியதும் அல்ல” என்று அரிஸ்ரோற்றிலோ யாரோ சொல்லியிருப்பதை இவ்விடத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

கவிதைச்சரம்

கேள்வி ஞானம்

டையல்
திதி நாளன்று
அம்மாவுக்கு...
'மற்ற நாட்களில்
பசிக்காதா பாட்டிக்கு?'
என்கிறாள்
என் தேவதைக் குழந்தை!

*****************************************

சேமிப்பு

கீரை விற்ற கிழவியிடம்
பேரம் பேசி சேமித்தேன்
ஒரு ரூபாய் பணமும்
ஒரு மூட்டை பாவமும் !

*****************************************

வழி சொல்

நெ
ருங்குதலும் விலகுதலும்
எளிது உனக்கு
வழி ஒன்று சொல்லிப் போ
தடயங்கள் அழிக்க !

*****************************************

களை இழந்த மாடம்

பூப் போட்ட பாவாடை
பொருத்தமற்ற தாவணி...

நாலணா பொட்டு
சந்தையில் வாங்கிய
வளையல், தோடு...

படிய வாரிய தலை
வாடிப்போன மல்லிகை
எனினும் தேவதைதான்
ரேவதி அக்கா...

பணக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு
களையிழந்துபோனாள்
பட்டுப் புடவையிலும்
பகட்டுச் சிரிப்பிலும் !

*****************************************

குரூர நிம்மதி

ரணித்த மழழைகளின்
பெயர்ப் பட்டியல்
தன் பிள்ளை இலையெனும்
நிம்மதி,
நொடிப் பொழுதாயினும்
எத்தனை குரூரமானது?

*****************************************

வெறுமையின் மொழியில்...

கிர்தலுக்கு எதுவுமற்றுப் போனாலும்
ஒரு வெற்றுக்
குறுஞ்செய்தி அனுப்பு.

என் அலைபேசி
ஒழி எழுப்பட்டும்
எங்கோ உன்
இருப்பை அறிவித்து!

*****************************************

நிறுத்தம்

லைபேசி அழைப்பில்
'எங்கே இருக்கிறாய்?'
எனக் கேட்கிறாய்?
எனக் கேட்கிறாய்
நீ விரல் பிடித்து
அழைத்துச் சென்று
நிறுத்திய இடத்தில்தான்
இருக்கிறேன் இன்னமும்..

சொல்...
நான் எங்கே இருக்கிறேன்?

*****************************************

கனவுப் பயணம்

று வயது மகளின்
கனவுக்குள் பிரவேசிக்க
நேரிட்டது ஒரு நாள்

பட்டாம்பூச்சி மீது பயணம்
சித்திரகுள்ளன் சிநேகம்
சாக்லேட் வீடு
ஐஸ்க்ரீம் சாலை

கனவிலிருந்து வெளியேற
வழி தேடினேன்
இல்லாமல் இருந்தால்
நல்லது!

*****************************************

எப்படி மறந்தாய்?

ரு வார்த்தையோ சிறு அசைவோ
போதுமானதாக இருக்கிறது
என் மீது உனது வன்முறைக்கு...

எப்போதும் கூறிய ஆயுதங்களுடன்
எனைத் தாக்க காத்திருக்கிறாய்
காரனங்களுக்காக...

எப்படி மறந்தாய்
என்னிடம் உண்டு
காரணங்களும் சில ஆயுதங்களும் என!       

Monday, November 22, 2010

தேசபக்தியும் மரணவிதைகளும்

‘கொலையும் ஒரு கலை’ என்று மந்திரிகுமாரி படத்தில் கருணாநிதி வசனம் எழுதினார். கடந்த முப்பது வருடங்களாக நமது மக்கள் கைதட்டி விசிலடித்து ரசித்து வந்தததைப் பார்க்கும்போது, அது மக்களபிமானம் பெற்ற கலைகளில் தலையாயது என்றே தோன்றுகிறது.

எதிர்த்தரப்புத் தலைகள் உருளுவதைப் பார்த்து வெறியும் ஆவேசமுமாகத் திருப்திப்பட்டுக் கொள்ளும் மனநிலை குகைமனிதர் காலத்தையதுதான் என்று ஒரேயடியாகச் சொல்ல முடியவில்லை. அறம், நீதி, மனிதப்பண்பு, நாகரிகம் என்று எவ்வளவோ வளர்ச்சி நிலைகளைக் கண்டு தாண்டி வந்த பின்னாலும், இன்றும்கூட மனிதர்களை மனிதர்களே கொல்லுவதற்குச் சொல்லிக்கொள்ளும் நியாயங்களை விட்டுவிட முடியவில்லை.

கொலைப் பழியை கொலை செய்கிறவர்களிடம் மட்டுமே சுமத்திவிட்டு மற்றவர்கள் தப்பிவிடவும் இயலாது. எத்தனை எத்தனையோ அற நீதிகள், அகிம்சா போதனைகளுக்கு மத்தியிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொலைகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது எல்லா மனிதர்களுமே கொலைக்கருவிகளைத் தமக்குள் எங்கோ ஒளித்து வைத்துக்கொண்டு நடமாடி வருவதாகத்தான் படுகிறது.

ஜோர்ஜ் லூகாச் 1919-ல் எழுதிய ‘நடைமுறைத் தந்திரமும் அறவியலும்’ என்ற கட்டுரையில் கூறியுள்ளதாவது: “சமத்துவத்துக்கான போராட்டத்தின் பக்கம் நிற்க முடிவு செய்திருக்கும் ஒவ்வொருவரும் போராட்டத்தில் மடிகின்ற ஒவ்வொரு மானுடஜீவியின் மரணத்திற்கும் தானே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் – அவர்கள் அனைவரையும் தானே கொன்றுவிட்டதாகக் கருதி. அறவியல் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில், யாருமே இந்தப் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது. அதாவது, தான் ஒரு தனி மனிதன், எனவே உலகத்தின் தலைவிதி தன்னைச் சார்ந்திருப்பதில்லை என்னும் சாக்கைச் சொல்லி இந்தப் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது.”

எதிர்க்க வேண்டும் என்று தோன்றினாலும் எதுவுமே செய்ய முடியாத கையாலாகாத்தனமும் குற்றவுணர்ச்சியைத் தரும் சோர்வும் ஒருபுறமிருக்க, தாமே கருதிக்கொள்ளும் நியாயத்துக்காக கொலைகளை எதிர்க்காதிருக்கும் மனிதர்களின் குற்றம் இன்னும் பெரிதாகவே இருக்க வேண்டும். தங்களிடமிருக்கும் நியாயத்தையும் தர்மத்தையும் கொண்டு மற்றவர்களின் அதர்மத்தை அழித்தல் என்பதைச் சொல்லியே எல்லாப் போர்களும் நடந்தேறுகின்றன. அதாவது, போரில் குதிக்கும் ஒவ்வொரு தரப்புமே தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்ற நம்பிக்கையுடனேயே குதிக்கிறது. எதிர்த் தரப்பின் பார்வையை மறுதரப்பு உணர்வதில்லை. மற்றவர்களின் வலியை, துக்கத்தை, அழுகையை அறியவோ ஆராயவோ முன்வருவதில்லை. நமக்குள் அதைத் தேடிப் பார்க்க அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை. நாம் கருதிக்கொள்ளும் நியாயத்திற்கான பொங்குகை மட்டுமே போதுமாயிருக்கிறது.

யோசித்துப் பார்த்தால், தங்களிடமிருக்கும் நியாயமும் தர்மமுமே மற்றவர்களின் அதர்மத்தை அழித்துவிடப் போதும் என்று நம்புபவர்களே மனிதகுலத்திற்குப் பெரிதும் ஆபத்தானவர்கள் என்று தோன்றுகிறது. “தேசபக்தி முழக்கங்களோடு மரண விதைகளைத் தூவ வந்திறங்கியிருக்கிறார்கள் இன்றைய புதிய மனிதர்கள்” என்றெழுதினார் கமலாதாஸ். உண்மைதானே! தேசத்துக்காக மரணிப்பது பெருமைக்குரியது@ மக்கள் அவனைக் கொண்டாடுவார்கள் என்ற ஆசை புகுத்தப்பட்ட ஒருவனுக்கு மரணம் விருப்பத்துக்குரியதாகி விடுகிறது. சாவது விருப்பத்துக்குரியது என்றாகிவிட்டால், கொலைகள் செய்வதும் எளிதாகி விடுகிறது.

நம் தரப்பை ஏற்காதவர்களைக் கொன்று, நாம் வாழ்வது என்கிற ஏற்பாடு அல்லது நமது தர்மத்துக்குப் புறம்பாக உள்ளவர்களை அழித்து நாம் ஜெயித்தல் என்பதுதான் இன்றைக்கும் நம்மிடமுள்ள ‘வாழ்தல்’ அறமா? மொழி, இனம், தேசியம் போன்ற இன்னோரன்னவை அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் அழியலாம் என்பது சரிதானா?

வாழ்வு, சுதந்திரம், இன்பம் போன்றவற்றைக் கட்டியெழுப்ப அமெரிக்கர்களுக்குத் தேவைப்பட்டவை பழங்குடிகளாயிருந்த செவ்விந்தியர்களின் 75 மில்லியன் மண்டையோடுகளும், ஆபிரிக்க மக்களின் 15 மில்லியன் சங்கிலி பூட்டிய உடல்களும் என்பதை நாமறிவோம். இதுவே இன்னும் விரிவடைந்து உலக அமைதிக்கு உலக சுபிட்சத்திற்கு என மேலும் பல மில்லியன் உயிர்களைக் காவு கொள்ளும் தாகமாகத் தொடர்கிறது.
மொழிக்காக, குலத்துக்காக, மதத்துக்காக, தேசியத்துக்காக என்று வரலாற்றில் அனேகம் போர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. மனித இனம் அமைதியாகவும் சுபிட்சமாகவும் வாழும் வழியை அவைகளால் தந்துவிட முடியவில்லை. போரை வெல்லும் மாவீரம் என்பது அதை உருவாக விடாமல் தடுப்பதிலேயே உள்ளது. அதற்குக் காரணங்களை ஏற்படுத்தாத கரிசனையிலேயே உள்ளது. மரணத்தை வலுவிழக்கச் செய்யும் வாழ்வாதாரங்களையே நாம் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஹிட்லரின் வதைமுகாமில் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பிய விக்டர் பிராங்கல் என்ற உளவியலாளர் பின்னர் எழுதினார்: “மனிதன் என்னவெல்லாம் செய்ய முடியுமென்பதை ஆஸ்விச் வதைமுகாம் மூலம் நாம் அறிந்திருக்கிறோம். இனி என்ன நடக்கக் காத்திருக்கிறது என்பதை ஹிரோஷிமா மூலம் நாம் அறிந்திருக்கிறோம். எனவே, நாம் எச்சரிக்கையோடு இருப்போம்.”

இந்தியாவின் உத்தராஞ்சல் மாநிலத்தில் புகழ்பெற்ற வேட்டைக்காரராக விளங்கிய ஜிம் கார்பெட், ‘எனது இந்தியா’ என்ற அவரது பிரபலமான நூலில் குறிப்பிடும் ஒரு சம்பவம் இது:

“இரண்டு வயதுப் புத்தாலியும், மூன்று வயதுப் புன்வாவும் காணாமல் போனது வெள்ளிக்கிழமை மத்தியானத்தில். மாடு மேய்ப்பவன் அவர்களைக் கண்டெடுத்தது திங்கட்கிழமை சாயங்காலம் சுமார் ஐந்து மணிக்கு – கிட்டத்தட்ட எழுபத்தேழு மணி நேரம் கழித்து. எனக்குத் தெரிந்த வரை அந்தக் காட்டில் இருந்த காட்டு விலங்குகள் பற்றிய விபரத்தை முன்னரே கொடுத்திருக்கிறேன். அந்தக் காட்டில்தான் எழுபத்தேழு மணி நேரத்தைக் குழந்தைகள் கழித்திருக்கிறார்கள். மேற்சொன்ன விலங்குகளும் பறவைகளும் இந்தக் குழந்தைகளைப் பார்க்கவோ, கேட்கவோ அல்லது மோப்பம் பிடிக்கவோ இல்லை என்று அனுமானிப்பதற்கு எந்த ஒரு நியாயமுமில்லை. இருந்தாலும், மாடு மேய்ப்பவன் புத்தாலியையும் புன்வாவையும் அவர்களது பெற்றோரின் கரங்களில் ஒப்படைத்தபோது, குழந்தைகளின் மேல் பற்தடமோ, நகக்குறியோ ஒன்றுகூட இல்லை.

ஒரு மாதமே நிரம்பிய ஆட்டுக்குட்டியை நோக்கிப் பெண்புலியொன்று பதுங்கிப் பதுங்கி வந்ததை ஒருமுறை பார்த்தேன். திறந்த வெளியாய் இருந்தது அந்த இடம். புலி சற்றுத் தொலைவில் வரும்போதே ஆட்டுக்குட்டி அதைப் பார்த்துவிட்டது. கத்திக் குழறத் தொடங்கியது. உடனே, பதுங்குவதை விட்டு நேராக ஆட்டுக்குட்டியிடம் சென்றது புலி. சில யார் தூரத்துக்குள் புலி வந்த மாத்திரத்தில், ஆட்டுக்குட்டி அதை எதிர்கொண்டு சென்றது. அருகில் சென்றதும் புலியை முகர்ந்து பார்ப்பதற்காகத் தன் கழுத்தை நீட்டித் தலையை உயர்த்தியது. மூச்சுத் திணற வைத்த சில நொடிகளுக்கு வனத்தின் அரசியும், பிறந்து ஒரு மாதமே ஆன ஆட்டுக்குட்டியும் முகத்தோடு முகம் உரச நின்றனர். பிறகு அரசி திரும்பி விட்டாள். வந்த வழியே திரும்பிச் சென்றாள்….

படைத்தவன் காட்டுயிர்களுக்காக உருவாக்கிய அதே சட்டங்களை மனிதர்களுக்காகவும் உருவாக்கியிருந்தால் யுத்தங்களே இருந்திருக்காது. காரணம், எளியவர்கள் மீது வலியவர்களுக்குக் கரிசனம் இருந்திருக்கும்; கானகத்தினுள் சட்டமாக நிறுவப்பட்டிருக்கும் அதே கரிசனம்.”

Friday, November 19, 2010

தோழர்.பத்மநாபா காட்டிய வழியில்...

"நாம் மக்களுக்காகப் போராடுவது
எம்மீது சுமத்தப்பட்ட கடமையே தவிர;
எமக்கு வழங்கப்பட்ட அதிகாரமல்ல"

- தோழர் க.பத்மநாபா

பாசிசத்திற்கெதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும், இந்தியாவின் நண்பனாக, சர்வதேச முற்போக்கு விடுதலை இயக்கங்களின் உற்ற தோழனாக, அமைதி, சமாதானம், ஜனநாயகத்தை ஏற்படுத்த உறுதியோடு போராடிய போராளி.

மார்க்சிய, லெனினிய சித்தாந்தத்தில் அதிக ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டிருந்தார். இடது சாரிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தினார். இலங்கையிலும், இந்தியாவிலும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இயங்கிய பல்வேறு இடதுசாரி தலைவர்களோடும், நெருங்கியத் தொடர்பினை வைத்திருந்தார். சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றதுடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்கும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதிலும் சகல முற்போக்கு சக்திகளோலோடும் இணைந்து நின்று செயலாற்றினார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் பிரதானமானவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனர். அதன் முதல் பொதுச் செயலாளர். 1951 நவம்பர் 19ல் பிறந்த இவர் தனது 39 வருடகால வாழ்நாளில் 20 வருடங்கள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், அப்போராட்டத்தின் வழி நின்று இலங்கையின் ஒற்றுமைக்கும், அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின், தொழிலாளர்கள், விவசாயிகளின் பூரண விடுதலைக்காகவும் அயராது இறுதிவரைப் போராடியவர்.

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்தபோது, ஆயுதத்தின் மீது காதல் கொள்ளாமல், ஒரு தற்காப்பு கருவியாகவே பயன்படுத்தவேண்டும் என்று தனது இயக்கத்தினருக்கு வழி காட்டினார்.

தமிழ் போராளி இயக்கங்களிடையே ஒற்றுமையின்மை தலைதூக்கியபோதெல்லாம், அதை வேரூன்றவிடாமல் ஒற்றுமைக்காக கடுமையாகப் போராடினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம், பிளாட் இயக்கத் தலைவர் பாலகுமார் மற்றும் மிதவாத இயக்கத்தலைவர்கள் அமிர்தலிங்கம் போன்றோரை சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஒற்றுமைப்படுத்தும் நடவடிக்கையில் சளைப்பில்லாமல் ஈடுப்பட்டார்.   

ஆனால் பாசிச குணம் கொண்டு, தான் மட்டுமே தமிழர்களின் ஏகப்பிரதிநிதி என ஆயுத பலத்தின் வன்மையால், சகோதரப்படுகொலைகளை நிகழ்த்தி, மேலே சொன்ன தலைவர்களை கொன்றொழித்தது பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகள் இயக்கம். 1990 ஜூன் 19-இல் சென்னையில் இயக்கத் தலைவர்களுடன் உரிமைப் போராட்டத்திற்கான திட்டம் வகுக்க உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பாசிச புலிகளால் தோழர்.பத்மனாபாவையும் உடனிருந்த 13 தோழர்களையும் கோழைத்தனமாக கொலை செய்தனர் புலிகள்.

அரசியல், ஜனநாயகக் கோட்பாடுகளில் நம்பிக்கையற்று, ஆயுதத்தின் மூலம் மட்டுமே விடுதலையை அடைய முடியும் என்ற பாசிச கோட்பாட்டில் மூழ்கி திளைத்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பலி கொடுத்து தானும் பலியானதுதான் பிரபாகரனின் சாதனை. தனக்குப் பின்னால் இயக்கத்தை வழி நடத்த இரண்டாம் கட்டத் தலைவர்களைக் கூட உருவாகத் தவறிய ஏகாதிபத்தியவாதியாக திகழ்ந்தவர் பிரபாகரன்.

இன்றைக்கு இலங்கைத் தமிழர்கள் தங்களது உரிமைப் போராட்டத்தை எந்த திசை வழியில், தலைமையின் கீழ் நோக்கி நின்று கொண்டிருக்கின்றனர்.

நம்பிக்கை இன்னும் அழிந்திவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் தங்களது அரசியல் பணிகளை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், சோதனைகளுக்கும் இடையில் தோழர் பத்மநாபா காட்டிய வழியில், அவர் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.

உலகின் வரலாற்றை பின்னோக்கி நகர்த்திச் செல்ல முயன்ற ஹிட்லர், முசோலினி போன்ற பாசிசவாதிகளை வரலாறு குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியது போல, தமிழ் பேசும் மக்கள் மத்தியில், தமிழ் மக்களையே கொன்று குவித்த, மீண்டும் குவிக்கத் துடிக்கும் பாசிசக் கூட்டத்தை தமிழ் மக்கள் தோற்கடித்து, வரலாற்றுச் சக்கரத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வர் என்பது திண்ணம். அந்த வழியில் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும், ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்கும் தங்களை அர்ப்பணிக்க களம் கண்டுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பின் தோழர்களுக்கு தோழர் க.பத்மநாபாவின் பிறந்த நாளில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.    

"நாம் மக்களில்லாத மண்ணை நேசிக்கவில்லை;
மக்களுக்காகவே மண்ணை நேசிக்கிறோம்"
- தோழர் க.பத்மநாபா
நன்றி ஜீவா முழக்கம்  

        

Thursday, November 18, 2010

ஆயுதங்களை மனதிலிருந்தும் களைவோம்


ற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவில் பல தரப்புகளிலிருந்தும் அபிப்பிராயங்கள் சொல்லப்பட்டு வருவதும், அவை ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் பகிரங்கப்படுத்தப்பட்டு வருவதும் - நமது சூழலின் நெகிழ்வுக்கு மிக முக்கிய பங்களித்து வருவதை உணர முடிகிறது.

வன்னியிலும் கிழக்கிலும் அரச தரப்பால் பாதிப்புக்குள்ளான மக்கள் பல பதிவுகளைச் செய்திருக்கின்றனர். அப்பாவி மக்களுக்கு நடைபெற்ற பல்வேறு அநீதங்களுக்குமான எடுத்துக்காட்டுகளாக ஒரு சிலரேனும் ஆணைக்குழு முன் சாட்சியங்களாகியிருப்பது பாராட்டுக்குரியது.

பதிவு செய்யப்பட்டது மட்டுமல்ல, ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அவை பகிரங்கமாக விடப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியது. இது உள்ளுக்குள் குமைந்து இறுகும் புழுக்கத்தைக் குறைத்துக் கொள்வதுடன் திறந்த உரையாடல்களை நோக்கி நம் சமூகங்கள் நகர்வதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

தமிழ் பேசும் சமூகங்களைப் பொறுத்தவரை, பெரும்பான்மைச் சமூகத்தின் மீதும் அரசின் மீதும் சுமத்துவதற்கு ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் நம் தரப்பில் விட்ட தவறுகள் பற்றிய சுயவிமர்சனம் எதுவுமில்லாமல், ‘இணக்கமான சூழலே எங்களது எதிர்பார்ப்பும்’ என்று சொல்லிக் கொண்டிருப்பது எப்படி மாறுதலாகும்? எங்களுக்கே துக்கம் அதிகம் இழப்புகள் அதிகம் என்பதால் இதற்கெல்லாம் எங்கள் தரப்பிலான தவறுகள் எதுவும் காரணமில்லை என்றாகி விடுமா?

பிறரை மட்டும் குற்றம் சாட்டியபடி அவர்களை சர்வதேச சமூகத்தின் முன்னால் மடக்கிப் பணியச் செய்து, இணக்கத்துக்கு நகரலாம் என்ற இறுமாப்பில் தெரிவது விவேகமா, பாமரத்தனமா?

இன்பத்தின் எல்லையே துன்பம்!

'இன்பம் என்பது எல்லா உயிர்க்கும் பொதுவானது' என்பார் தொல்காப்பியர்.

'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றும் அறியேன் பராபரமே'
என்பார் தாயுமானவர்.

இப்படி இன்பத்தைப் பற்றி எழுதுகிறபோதே இன்பமாக இருக்கிறது. எல்லோரும் இன்பமாக வாழவே ஆசைப்படுகிறோம். அதிலும் இளமைப் பருவம், இன்பங்களை அனுபவிக்கத் துடிக்கும் பருவம். அதனால்தான் இளமைக் காலம் வாழ்வின் வசந்தகாலம் என்று வருணிக்கப்படுகிறது.

இந்தப் பருவத்தில்தான் எண்ணங்கள் சிறகடித்து எங்கெங்கோ பறக்கும். புதுமைகளைக் காண மனம் துடிக்கும். இன்பத்தையெல்லாம் அள்ளி அள்ளி அனுபவிக்க இதயம் ஏங்கும். காரணம் வயது. இது அரும்பு மீசை துளிர்க்கும் வயது. குறும்பு ஆசைகள் கொப்பளிக்கும் வயது. எதற்கும் கட்டுப்படாத காளை வயது. பற்றவைத்த உடனேயே பற்றி எரியும் கற்பூர வயது.

Wednesday, November 17, 2010

கவிதைச்சரம்

கால முள் கடிகாரம் !

றே ஆறு வாரங்களில்
சிவப்பழகுக்கு ஆசைப்பட்டு
வருடக்கணக்கில் வாங்கிய
பேஸ்ட் ட்யூப் ஏராளம்.

ஐஸ்வர்யா ராயைப்
பார்த்ததில் இருந்து
பியூட்டி பார்லர்
மாதங்களுக்குள் அடைபட்டது.

ஹை ஹீல்ஸும்
லிபர்டி கட் சுடிதாரும்
வெள்ளிக்கிழமை சிறப்பு.

பாடி டியோடரன்ட்டும்
டாண்ட்ரஃப் ஷாம்பும்
அன்றாட பட்ஜெட்.

பிரதி மாத ஹலோ டியூங்களுக்கு
ஹாரிஸ் ஜெயராஜும்
யுவன்ஷங்கர் ராஜாவும்.

எச்சிலூறும் எஸ்.எம்.எஸ்.
வரப் பெறாதவர்கள்
நட்பு தேவையில்லை.

காசார நாட்களுக்கென்றே
கனகாம்பரமும்
மயில் கலர் பட்டுத் தாவணியும்.

தலயும் மேடியும்
தூங்கவிடாத
மின்சாரக் கனவுக் கண்ணன்கள்.

நினைத்தும் பார்க்கவில்லை
அப்போது
இடுக்கிய கண்களும்
ஒடுங்கிய கன்னமும்
துருத்தியிருந்த நெஞ்செலும்புமாய்
துருப்பிடித்த சைக்கிள்
வரனைத்தான்
அப்பாவின் பொருளாதாரத்துக்குள்
அடக்க முடியும் என்று.

மூன்றே வருடங்களில்
இரண்டுக்குத் தாயாகி
முப்பத்தைந்து முதுமை காட்டி
முதுகு வளைத்தது வறுமை.

பலசரக்குக் கடைக்காரன்
கடுகு கட்டிய காகிதத்தில்
'வீட்டிலேயே பியூட்டி டிப்ஸ்...

உருளைக் கிழங்கையும்
தக்காளியையும் மசிய அரைத்து
தயிர் கலந்து
இரவு படுக்கும் முன்
முகத்தில்....'

அது சரி,
அதை மூஞ்சில் அப்பிக்கிட்டா
வெந்த சோத்துக்கு
வெந்நீர் ஊத்தியா திங்கறது?

பால நாயகர்

*****************************
 
நெடுஞ்சாலை விழுங்கிய நதி !

ளம் வயதில்
இங்கு ஒரு சிறு நதி
ஓடிற்று என்றேன்
மகனிடம்.

நம்ப முடியாமல்
பார்த்தான்...
தேசிய நெடுஞ்சாலையில்
வாகனங்கள்
விரைந்தோடிக்கொண்டிருந்தன !

ஆர்.எஸ்.பாலமுருகன்

*****************************
 
போய் வா... சூரியா !

ழு நாள் விடுமுறைக்குப் பின்
திறக்கப்பட்ட வீட்டின்
தினசரி காலண்டரை
ஆளுக்கு ஒன்றாய்க்
கிழித்தெறிந்தன குழந்தைகள்.
இறந்த கால வீட்டினுள்
நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும்
கடிகாரத்தின்
நிகழ கால முட்கள் துரத்த
படியிறங்கிச் செல்கின்றன
ஏழு சூரியன்களும்
ஏழு சந்திரன்களும் !

*****************************
 
அழிய மறுக்கும் அடையாளம் !


ள்ளியில் புதிதாய் தந்த
அடையாள அட்டையை
கழற்ற மறுத்து
வகுப்பாசிரியைபோல
பாவனை செய்து
'மிஸ்' விளையாட்டு
விளையாடிக் களைத்த
குழந்தையின் கழுத்திலிருந்து
அடையாள அட்டையை
மெல்லக் கழற்றும் வேளை
குழந்தை உறங்கத் தொடங்கியது
குழந்தை என்ற அடையாளத்துடன்

கே.ஸ்டாலின்    

Monday, November 15, 2010

கவிதைச்சரம்

மாயக் கண்ணன்

கன்று விரித்த
கால்களின் நடுவே வைத்து
தட்டில் இருக்கும் சோற்றைவிட

தரையில் அதிகம் சிந்தியபடி

ஒவ்வொரு பருக்கையாக எடுத்து
சாப்பிட்டுக்கொண்டு இருந்த குழந்தையிடம்
'மாமாவுக்குப் பசிக்குது
கொஞ்சம் குடுங்க செல்லம்' என்று
கை நீட்டினேன்.

பிஞ்சு விரல்களால்
ஒற்றைப் பருக்கை எடுத்து
என் உள்ளங்கையில் வைத்தது.
அதை உண்டதும்
என் வாழ்நாள் முழுவதுக்குமான
பசி தீர்ந்தது!

கட்டளை ஜெயா 

*********************************

புறக்கணிப்பின் நியாயங்கள்...

புறக்கணிப்பின் முடிவில்தான்
புரியும்

சரியான ஒரு
இடம் நோக்கி
நகர்த்தப்பட்டு இருப்பது

அல்லது

சரியான ஒரு
இடம் காத்திருப்பது


அல்லது

சரியான  ஒரு
நபருக்காக விட்டுக்கொடுத்திருப்பது

அல்லது

சரியான ஒரு
எதிர்ப்பைக் காட்டதிருப்பது


அல்லது

சரியான ஒரு

எதிரியைக் கண்டுகொண்டது


அல்லது


நியாமில்லை

என்றாலும் கூட


சரி என்று

எல்லாவற்றையும்

ஏற்றுக்கொண்டது!


க.ஆனந்த்


*********************************


புண்ணியவான்

பேச்சுத் துணைக்கு ஆளின்றி

மூச்சுத் துணைக்கு ஆளாயிருந்தார்

சாப்பாட்டுக்கும் சகலத்துக்கும்

பெத்த பிள்ளையை அண்டியிருந்த

கடைசி காலக் கந்தசாமி.

 
தனியறையின்

தறிக் கட்டிலில்

புதைந்துபோன மனுஷனுக்கு

வேளாவேளைக்குச் சாப்பாடும் 

காலாகாலத்துக்குச் சாவும்

வந்து சேரவில்லை.


முணுமுணுப்புடன் எரிச்சலும் கலந்து வீசப்படும்

உப்பிலாப் பண்டத்தின் முன்

ஓய்ந்துகிடக்கும் பசி

கண்ணீர் கலந்து பிசைந்தால்

சரியாகிவிடும் ருசி.


இயலாமை சேர்ந்து

விழுங்கும்போது
தொண்டையை அடைக்கும்

வயோதிகத் தனிமை.


ஒரு திங்கள் மதியம்

தீர்ந்துபோனது

கந்தசாமியின் கஷ்டங்கள்.


கூடிய கூட்டம் பேசிற்று

'யாருக்கும் எந்தக் கஷ்டமும் தராம

போய்ச் சேர்ந்துட்டான்

புண்ணியவான்!'


கணேச குமாரன்


*********************************
 
பறக்க இயலாத பறவை


எல்.கே.ஜி. வகுப்பில் இங்கிலீஷ் பீரியட் முடிந்ததும்

தமிழ்ப் பாட நேரம் துவங்கும் என ஆசிரியை அறிவித்தவுடனே

ஆங்கிலப் புத்தகத்தில் இருந்த சித்திரங்கள்

தமிழ்ப் புத்தகத்துக்குத் தாவுகின்றன யாரும் அறியா வண்ணம்.


ஜீப்ரா வரிக்குதிரை என்றும் ஜிராஃபி ஒட்டகச்சிவிங்கி என்றும்

பெயர்களைத் தமிழில் மாற்றிக்கொண்டு இடம்பெயர

அவற்றைத் தொடருகிறது ஒரு பெருங்கூட்டம்.லோட்டஸ் என்றழைக்கப்படும் தாமரை, ரோஸ் எனப்படும் ரோஜா

ராபிட்(எ) முயல், பேரட்(எ) கிளி, டக்(எ) வாத்து,
யானை, மீன், மயில், ஆடு, பந்து.... என நீள்கிறது வரிசை

எங்கே இருந்தாலும் ஒரே மாதிரி முழி ஆந்தைக்கு.


எப்போதும் குழந்தைகளுடன் இருப்பதற்கான யுத்தி தெரியாமல்

எம்பி எம்பிக் குதித்தபடி தவிக்கிற பென்குவினுக்கு

தேவை ஒரு தமிழ்ப் பெயர்!


இளையநிலா ஜான்சுந்தர்  
 

Saturday, November 13, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

தப்பிக்க வழியேயில்லை. துளித்துளியாக இறந்துக் கொண்டிருக்கிறோம் என்பது அரான் ரால்ஸ்டனுக்கு நன்றாகவே புரிந்தது. வலது கையை அசைக்க முடியவில்லை. கனமான பாறையில் விரல்கள் சிக்கியிருக்கின்றன. சுதந்திரமாக இருப்பது இடது கை மட்டும்தான்.

கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. மயக்கம். சாவு நெருங்கும் மயக்கம். இன்னும் எத்தனை நிமிடங்களில் இறக்கப் போகிறோம்? தெரியவில்லை. யாரிடமும் சொல்லாமல் வந்தது எவ்வளவு பெரிய தவறு என அந்த நேரத்தில் அரான் ரால்ஸ்டனுக்கு புரிந்தது. கையிலும் செல்ஃபோன் இல்லை. இருந்தாலாவது இப்படியொரு ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்ற தகவலை வெளியுலகத்துக்கு சொல்லலாம். இப்போது என்ன செய்வது?

சுற்றிலும் பார்த்தார். மலையின் பிளவில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே புரிந்தது. கீழே பள்ளம். அது எத்தனை அடி ஆழத்தில் இருக்கும்? உத்தேசமாகக் கூட கணக்குப் போட முடியவில்லை. மேலே கிட்டத்தட்ட 70 அடி உயரத்தில் மலை உச்சி தெரிந்தது. அதை அடைய முடியுமா?

நோ சான்ஸ். சிக்கியிருப்பது பள்ளத்தின் நடுவில். ஒராள் பக்கவாட்டில் மட்டுமே நிற்கக் கூடிய பிளவு அது. மேலே ஏற இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டும். வலது கை பாறையில் சிக்கியிருக்கிறது. இடது கையால் பாறையை நகர்ந்த முடியவில்லை. காரணம், பிளவில் பாறை வலுவாக ஊன்றி நிற்கிறது. இனி ஒரு இன்ச் கூட அந்தப் பாறை நகராது.

அடி வயிற்றிலிருந்து பெருமூச்சு கிளம்பியது. துக்கம் தொண்டையை அடைத்தது. சுதந்திரமாக இருக்கும் இடது கையால் அருகிலிருந்த பாறையில் ஆணியைக் கொண்டு தனது பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை செதுக்கினார். இறந்த தேதி என்று எதை குறிப்பிடுவது? இன்றா... நாளையா? இரண்டு தேதிகளும் இருக்கட்டும் என்று எழுதினர். வீடியோ கேமராவை ஆண் செய்து தன் காதலிக்கும் நண்பர்களுக்கும் செய்திகளை சொன்னார்.

இனி இறப்பை வரவேற்க வேண்டியதுதான் என்ற தருணத்தில்தான் அரான் ரால்ஸ்டன், அந்த முடிவுக்கு வந்தார். எப்படியும் சாகப் போகிறோம். அதற்கு முன், முடிந்த வரை தப்பிக்க முயற்சிக்கலாமே?

பரபரவென காரியத்தில் இறங்கினார். குடுவையில் இருந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக, ரேஷன் முறையில் குடித்தார். குடிநீர் தீர்ந்ததும் தனது சிறுநீரையே பருகினார். டூல்ஸ்கிட்டில் இருந்த சாதனங்களைக் கொண்டு, பாறையில் சிக்கிய வலது கை விரல்களை, இடது கையினால் வெட்டினர். ஒற்றைக் கையால் 70 அடி தத்தித் தத்தி ஏறினார். மலை உச்சியை அடைந்தார். உயிர் பிழைத்தார்.

இந்தப் போராட்டம் நடந்து முடிய 127 மணிநேரங்களாயின. கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கும் மேல் சாவுடன் போராடி ஜெயித்த அரான் ரால்ஸ்டன், கற்பனைப் பாத்திரமல்ல. ரத்தமும் சதையும் நிரம்பிய நிஜ மனிதர். 2003ம் ஆண்டு சாவை நேருக்கு நேர் சந்தித்து இவரது அனுபவங்கள்தான் '127 ஹவர்ஸ்' ஹாலிவுட் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இயக்குனரான டேனி பாயல்தான், இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். இசை? வேறு யார், 'நம்ம' இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்தான்.

வாழ நினைக்கும் ஒவ்வொருவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்கிறார் தயாரிப்பாளர், பார்க்கலாமா?

கே.என்.சிவராமன்             
           

Friday, November 12, 2010

இன்று ஒரு தகவல்

சம இரவு - பகல் நாட்கள்

வருடம் முழுவதும் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணிநேரம் சமமாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. சில மாதங்களில் பகல் பொழுது நீண்டதாகவும், சில மாதங்களில் இரவு மிக நீண்டதாகவும் இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 22 -க்குப்பின் பகலின் நேரம் குறைந்து இரவின் நேரம் அதிகமாகத் தொடங்கும். இது படிப்படியாக அதிகரித்து டிசம்பர் 22 -ல் 'வின்டர் சாலிடிஸ்' என்று சொல்லக்கூடிய பகலின் அளவு மிகக் குறைந்த அளவாகவும், இரவின் அளவு மிக அதிகமாகவும் இருக்கும். மீண்டும் இதே போன்ற சுழற்சி திரும்பத் திரும்ப வரும்.

வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பூமியின் எல்லா பாகங்களிலும் சமமான இரவும், சமமான பகலும் இருக்கும். ஒவ்வொன்றும் 12 மணி நேரமாக இருக்கும். இத்தகைய நாட்களையே சம பகலிரவு நாட்கள் என்கிறார்கள். வசந்த காலத்தில் ஏற்படும் சம பகலிரவு நாள் மார்ச் 21. அன்று இது நிகழ்ந்து வசந்தகாலத்தை தொடங்கி வைக்கும். இது பூமியின் வடபகுதியில் நிகழும். தென்பூமியில் இதை இலையுதிர் காலம் என்று அழைக்கிறார்கள்.

இலையுதிர்காலத்தில் சம - பகலிரவு நாள் செப்டம்பர் 23 அன்று நிகழும். வட பாதி கோளத்தில் இலையுதிர் காலமாகவும், தெற்கில் வசந்தகாலமாகவும் இருக்கும். இந்த இரண்டு நாட்களிலும் பூமியினுடைய பூமத்திய ரேகை சரியாக சூரியனை நோக்கி இருக்கும். ஆகவே வட, தென் பூமியின் பாகங்கள் சமமான இரவும், பகலும் கொண்டிருக்கும். இதை வைத்தும் நிறைய கோவில்களிலும், பிரமிடுகளிலும் மத சம்பந்தமான சம்பிரதாயங்களை உருவாக்கி உள்ளார்கள்.

உதாரணமாக எல்காட்டியோ என்ற பிரமிடில் அன்றைக்கு சூரியன் மறையும் பொழுது அதனுடைய படிகளின் மீது விழும் நிழலும் அந்த சூரிய ஒளியின் கிரகணங்களும் ஏறத்தாழ வளைந்து நெளிந்து செல்லக்கூடிய பாம்பின் தலையில் வைரத்தை வைத்தது போல, இருக்கும்படி அமைத்தார்க.

குளிர் காலத்தின்போது, சூரியன் தாழ்வாக தெற்கு கோளத்தில் இருக்கும். அப்போது பகலை விட இரவு பொதுவாக அதிகமாக இருக்கும்.

அடுத்து வசந்தகாலம் வரும். அப்போது இரவும் பகலும் ஏறத்தாழ சமமாக இருக்கும். சூரியன் சற்றே மேல் வந்திருக்கும். அதன் பிறகு கோடைகாலம். அப்போது பகல் அதிகமாகவும் இரவு குறைவாகவும் இருக்கும். கடைசியாக இலையுதிர் காலம். அப்போதும் ஏறத்தாழ இரவும், பகலும் சம அளவு கொண்டதாகவே இருக்கும்.          

Tuesday, November 9, 2010

மனிதத் தூண்கள்!

கட்டிடத்துக்கு இரும்புக் கம்பிகளைப் போல நமது உடம்புக்கு அடிப்படை ஆதாரமாகத் திகழ்பவை எலும்புகள். நமது எலும்புகள் வலுவானவைதான். ஆனால் அவையும் உடையவும், வளையவும், சிதையவும் கூடும். சத்தான உணவு, கவனம் மூலம் எலும்புகளைக் காக்கலாம். உணவில் போதுமான அளவு கால்சியச் சத்து, நல்ல உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கங்கள் ஆகியவை எலும்புகளை உங்கள் ஆயுளுக்கும் அசைக்க முடியாத உறுதியுடன் திகழ வைக்கும்.

வகைகள்

தட்டை எலும்புகள்- மண்டையோட்டின் தட்டுகள், முதுகுத்தண்டு எலும்பு

நீண்ட எலும்புகள்- தொடை எலும்புகள், கை எலும்புகள்

குறுகிய எலும்புகள்- மணிக்கட்டு, கணுக்கால் பகுதி எலும்புகள்

ஒழுங்கற்ற எலும்புகள்- முதுகுத்தண்டுப் பகுதி எலும்புகள்

உருண்ட எலும்புகள்- கை, முழங்கால், பாதங்களில் உள்ள `பாட்டெல்லா' மற்றும் சிறு எலும்புகள்

எலும்புகளின் பணிகள்

முழு உடம்புக்கும் தோற்றம், தசை இயக்கத்துக்கு ஆதரவு.

முக்கியமான உறுப்புகளுக்கும், மென்மையான திசுக்களுக்கும் பாதுகாப்பு.

கால்சியம், பிற தாதுக்களைச் சேமிப்பது.

எலும்பு மஜ்ஜையில் ரத்த செல்களின் உற்பத்தி.

காதில் உள்ள மாலியஸ், இன்கஸ், ஸ்டேப்ஸ் எலும்புகள், ஒலியைக் கடத்துகின்றன.

பிறப்புக் குறைபாடுகள்

'ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்பக்டா'- அசாதாரணமான விதத்தில் எலும்புகள் உடைவது. குணப் படுத்த முடியாது. சிகிச்சை முயற்சிகளில் அறுவைச் சிகிச்சையும், `பிசிக்கல் தெரபி'யும் அடங்கும்.

'கான்ஜெனிட்டல் ஆம்புட்டேஷன்'- கை, கால் விரல்களில் ஒன்று இல்லாமல் இருப்பது. 2000 குழந்தைகளில் ஒன்றுக்கு இம்மாதிரியான பாதிப்பு ஏற்படலாம்.

உடையும் எலும்புகள்

'ஆஸ்டியோபோரோசிஸ்' என்பது எலும்புச் சிதைவு நோயாகும். ஒரு எலும்பு முறிவு ஏற்படும்வரை இது தெரியாது என்பதால், அமைதி நோய் எனப்படுகிறது. இந்நோய் ஏற்பட்டால், எலும்பின் வெளிப்பூச்சு மெல்லியதாகும், அடர்த்தியான தேன்கூடு போன்ற எலும்புத் திசுக்களில் பெரிய துளைகள் உண்டாகும். கால்சிய இழப்பால் ஏற்படுமë இந்நோய், ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக ஈஸ்ட்ரோஜென் குறைவு ஏற்படும் பெண்களை இது தாக்குகிறது. காரணம், கால்சியத்தைக் கிரகிப்பதற்கு உதவுவது ஈஸ்ட்ரோஜென்தான். இந்நோயைக் குணப்படுத்த வழியில்லை. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் `டி' நிறைந்த உணவு, போதுமான அளவு உடற்பயிற்சி, புகை, மதுபானம் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கும்.

சூரியக் குளியலின் நன்மை

கால்சியத்தைக் கிரகிப்பதற்கு வைட்டமின் `டி' உதவுகிறது. இந்த ஒரு வைட்டமினைத்தான் உணவால் மட்டுமே அளிக்க முடியாது. சூரியனிலிருந்து நேரடியாக சருமத்தால் வைட்டமின் `டி'யை கிரகித்துக்கொள்ள முடியும். அதனால், எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காதீர்கள்.

எலும்புகளைக் குணமாக்குவது

தடுப்பு, ஆதார அமைப்பு- முறிந்த எலும்பைச் சுற்றி நிலையான பொருட்களை இணைப்பது. அசைவைத் தடுப்பது.

மட்டை- முறிந்த எலும்பைச் சுற்றி உறுதியான பொருளை வைத்துக் கட்டுவது. தோலைப் பாதுகாப்பதற்காக தோலையடுத்து மென்மையான பொருள் வைக்கப்பட வேண்டும்.

எடையை இணைப்பது- முறிந்த எலும்புப் பகுதியுடன் எடையை இணைத்துத் தொங்கவிடுவது.

அறுவைச்சிகிச்சை- உடைந்த எலும்பைச் சரிசெய்ய தகடு அல்லது கம்பியைப் பொருத்துவது. சிக்கலான எலும்பு முறிவுகளில் இது மேற்கொள்ளப்படுகிறது.

எலும்பின் தாதுப்பொருள் அடர்த்தி

எலும்பின் ஒரு சதுர சென்டிமீட்டர் தாதுக்களின் அளவு, எலும்பின் தாதுப்பொருள் அடர்த்தி எனப்படுகிறது. எலும்பு வியாதியை இது காட்டும். எலும்பு தாதுப்பொருள் அடர்த்தியை அறிய, 'இரட்டைச் சக்தி எக்ஸ்ரே அப்சார்ப்டியோமெட்ரி' (டி.எக்ஸ்.ஏ) என்பது சிறந்த சோதனை முறையாகும். இதன்படி, -2.5 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் 'ஆஸ்டியோ போரோசிஸ்'. -1 முதல் -2.5 வரை இருப்பது குறைவான எலும்பு அடர்த்தியைக் குறிக்கும். 0 என்பது என்பது ஆரோக்கியமான நிலையாகும்.

எலும்புகளில் 50 சதவீதம் நீர் உள்ளது. இதன் உள்பகுதியில் உள்ள அடர்த்தியான திசுவில் 75 சதவீதம் நீர் உள்ளது.
முறிந்த எலும்பு, 12 வாரங்களில் இணைந்து விடும்.
உடம்பிலேயே மிகவும் வலுவானது தாடை எலும்பாகும்.
எலும்புகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதன்மூலம் அவை, வளர்ச்சியடையும், உயிருள்ள திசுக்களாகத் திகழ்கின்றன.
குழந்தைகளின் எலும்புகள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தங்களைப் புதுப்பித்துக்கொள்கின்றன.
கை மூட்டில் இடித்துக்கொள்ளும்போது 'ஷாக்' அடித்ததுபோன்ற 'சுருக்'கென்ற வலி ஏற்படுகிறது. அதற்குக் காரணம் அந்த எலும்பில் உள்ள 'உல்னார்' நரம்பாகும்.
குழந்தைப் பருவத்தில் எலும்புகளின் அளவு 7 மடங்கு அதிகரிக்கிறது.
தோட்டப் பராமரிப்பு வேலை, எலும்புகளின் ஆரோக்கியம் காப்பதற்கு நல்ல பயிற்சியாகும்.
பறவைகளின் அலகுகள் உண்மையில் 'கெரட்டினால்' சூழப்பட்ட எலும்புகளாகும். தோல், முடி, நகத்தில் காணப்படும் புரதம், கெரட்டின்.

Monday, November 8, 2010

'நோபல்' நாயகர்கள் 2010

உலகின் உயரிய கவுரவம், 'நோபல் பரிசு'. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நோபல் பரிசு வரலாறு உங்களுக்குத் தெரியும்தானே? இந்தப் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், சுவீடன் நாட்டுக்காரர். 1833-ம் ஆண்டு பிறந்த இவர், பொறியியல், வேதியியல் துறைகளில் மிகுந்த திறமை உடையவராகத் திகழ்ந்தார்.

'டைனமைட்' வெடிபொருளைக் கண்டுபிடித்த இவர், பெரிய ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலையையும் நடத்தினார். தனது கண்டுபிடிப்பு, மனித அழிவுக்குப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு மனம் வருந்தி, தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.

ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதியன்று நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பரிசுகள் சுவீடனிலும் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் தலா ரூ. 6 கோடியே 57 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு உரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிப் பார்க்கலாமா...

மருத்துவம்

ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ் (85)- இங்கிலாந்து


1925-ல் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் பிறந்தார், ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ். இரண்டாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் பணியாற்றிய இவர், போர் முடிந்தபின்னர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயிரியல் படித்தார். தொடர்ந்து ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1955-ல் பி.எச்டி. படிப்பை முடித்தார்.

அதன்பின் 1958 முதல் லண்டன் தேசிய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றினார் ராபர்ட்ஸ். 1963-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து பல மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்ட இவர், அங்குதான் 'இன் விட்ரோ பெர்ட்டிலைசேஷன்' ஆய்வை மேற்கொண்டார். 'ஐ.வி.எப்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் அதுவே 'சோதனைக்குழாய் குழந்தை' ஆய்வு.

Wednesday, November 3, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

விஞ்ஞானியும் ஆராய்ச்சியாளருமான ஸ்டீஃபன் ஹாகிங்ஸூக்கு ராயல்டி கொடுத்தார்களா அல்லது கதை என்று அவர் பெயரையும் குறிப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை.

ஆனால், 'ஸ்கைலைன்' ஹாலிவுட் படம் உருவாக அவர்தான் காரணம். 'வேற்றுகிரக உயிரினங்களுடன் பூமியில் வசிக்கும் மனிதர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பது ஆபத்தில் முடியும்...' என்ற பொருளில் அவர் நிகழ்த்திய உரையின் சாரம்சத்தைதான் புருவங்கள் விரிய விரிய மிகப் பெரிய விஷூவல் ட்ரீட்டாக படைத்திருக்கிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் நண்பர்கள், பார்ட்டியில் கலந்துகொள்கிறார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக கழித்துவிட்டு, தனித்தனி அறையில் உறங்கச் செல்கிறார்கள்.

ஆனால், நடு இரவில் யாரோ அவர்களை தட்டி எழுப்பிகிரார்கள். கண் திறந்து பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம். அவர்களை எழுப்பியது மனிதர்களோ அல்லது உயிரினங்களோ அல்ல. ஒளி. ஆமாம், அறைக்குள் ஊடுருவிய ஒளி அவர்களை தொட்டு எழுப்புகிறது.

அதியசத்துடன் அந்த ஒளியை பார்த்தவர்கள், அதன் அருகில் செல்கிறார்கள். முழு உடலிலும் அந்த ஒளி விழுந்ததும் கரைந்து போகிறார்கள். விட்டில் பூச்சி மின்சார பல்பின் ஒளியால் ஈர்க்கப்பட்டு மரணமடையுமே... அதேபோல் மனிதர்களும் இந்த அதிசய ஒளியால் ஈர்க்கப்பட்டு காற்றாக மாறுகிறார்கள்.

அடுத்தடுத்த நண்பர்கள் இப்படி கரைவதைப் பார்த்து பயந்துபோன சிலர், அறையைவிட்டு வெளியே வருகிறார்கள். பார்த்தால்...

நகரம் முழுக்க ஆங்காங்கே கம்பியைப் போல் வானத்துக்கும் பூமிக்குமாக ஒளிக்கதிர்கள். அந்த ஒளி ஊடுருவிய இடங்களில் எல்லாம் மனிதர்கள் கரைகிறார்கள், மறைகிறார்கள்.